நல்வரவாகுக

எதற்காக இது

நோய் எதிர்ப்புக் கொல்லிகளுக்கான எதிர்ப்புத் திறன்களின் எண்ணிக்கைகள் உலகெங்கும் அதிகரித்துச் செல்கிறது, இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பக்றீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்கள் அதிக சிரமமாக மட்டுமோ அல்லது மேலதிக சிகிச்சை வழங்க முடியாத நிலையோ ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. சுவிசிலும் ஒவ்வொரு வருடமும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பக்றீரியாக்கள் தொற்றுகின்றன, இருப்பினும் நோய் எதிர்ப்புக் கொல்லிகளுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

இதன் விளைவாக அதிகளவில் மனிதர்கள், விலங்குகள், விவசாயம் மற்றும் சூழல் பாதுகாப்பு ஒரே அளவில் பாதிப்படைகின்றது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள்

முக்கியமான தகவல்கள்

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியாக்களை கொல்லவோ அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடைசெய்யவோ பயன்படும் மருந்துகள். இவை மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு நோய்களுக்குப்
பலவிதமான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படும். வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக (உ.ம். தடிமல்) இவை செயல்படமாட்டா.

மேலும் தகவல்களுக்கு உங்கள் மருத்துவரையோ, பல் மருத்துவரையோ அல்லது மருந்துச்சாலை ஊழியரையோ அணுகவும்.

எதிர்ப்புத்தன்மை

பாக்டீரியாக்களுக்கு எதிராக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செயல்படாமல் போனால்

நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான எதிர்ப்புத்தன்மை என்பது பாக்டீரியாக்களுக்கு எதிராக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறைவாக செயல்படுவது அல்லது செயல்படாமல் போவது ஆகும். தேவையற்ற அல்லது அதீதமான நுண்ணுயிர் எதிர்ப்பி பயன்பாடு எதிர்ப்புத்தன்மையை உருவாக்கலாம். எதிர்ப்புத்தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் பிறருக்கும் உதவக்கூடியவை.

மேலும் தகவல்களுக்கு உங்கள் மருத்துவரையோ, பல் மருத்துவரையோ அல்லது மருந்துச்சாலை ஊழியரையோ அணுகவும்.

Sprechblase TA def
உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள பரிந்துரைக்கப்பட்டால…
அவற்றைச் சரியான முறையில் கையாளுங்கள

பின் வருவனவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்

  • மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தின் அளவு மற்றும் கால அளவினை முறையாகப் பின்பற்றவும்.
    உங்களுக்காகவே பிரத்தியேகமாக பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பியின் அளவு அதிகபட்ச பலனை அளிக்கும். ஒரு சில நாட்களுக்குப் பின்னர் நோய் குணமாகிவிட்டது போல் தோன்றினாலும் மருந்தினை இடையில் நிறுத்த வேண்டாம்.
  • ஒரு வேளை மருந்து உட்கொள்ளுவதைக்கூட தவறவிட வேண்டாம்.
    இடையில் ஒரு வேளை மருந்து உட்கொள்ள மறந்தாலும்கூட தொற்று நீடிக்கலாம் அல்லது குணமாவது பாதிக்கப்படலாம். பக்கவிளைவுகள் ஏதேனும் தோன்றினால் உடனே உங்கள் மருத்துவரையோ அல்லது மருந்துச்சாலை ஊழியரையோ அணுகவும்.
  • உங்களுக்கு அளிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பிறருடன் பங்கிட வேண்டாம்.
    உங்களுடைய சிகிச்சை உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அது உங்களுடைய தனிப்பட்ட தேவைக்கானது.
  • இடையில் நிறுத்தியதால் மீதமான மருந்தினை திரும்பக் கொண்டு வாருங்கள்.
    நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வீட்டுக்குப்பையில் சேர்த்துப் போடுவதினால் அவை சுற்றுப்புறச் சூழலில் (உ.ம். கழிவுநீர்) வந்தடையும். பிறருக்கு வழங்குவதற்காக ஒருபோதும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பத்திரப்படுத்தி வைக்காதீர்கள்.
உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்ப பரிந்துரைக்கப்படவில்லையெனில்...
முக்கியம்

இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

  • பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக மட்டுமே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செயல்படும்.
    ஒரு சில பாக்டீரியா தொற்றுகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தேவை இல்லாமல் குணமாகக் கூடியவை. தேவைப்பட்டால் மட்டுமே உங்கள் மருத்துவர் உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைப்பார். வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக (உ.ம். காயச்சல், தடிமல்) நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செயல்படமாட்டா.
  • பல சமயங்களில் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியே போதுமானது.
    ஆரோக்கியமான உடலானது தொற்றுகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. உதாரணமாக காய்ச்சல் என்பது நம் உடல் தொற்றுகளை எதிர்ப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தவறாகப் பயன்படுத்துவதினால் பாக்டீரியாக்களுக்கு எதிர்ப்புத்தன்மை உருவாகலாம்.
    எதிர்ப்புத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களுக்கு எதிராக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செயல்படாது. இதனால் தொற்றுகளை குணப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம் அல்லது இயலாமல் போகலாம்.
    நுண்ணுயிர் எதிர்ப்பியினாலும் தீங்கு நேரலாம்.
  • நுண்ணுயிர் எதிர்ப்பியினாலும் தீங்கு நேரலாம்.
    பொருத்தமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பியின் பயன்பாடு தேவையற்ற விளைவுகளை உருவாக்கும், உ.ம். பயனுள்ள பாக்டீரியாக்கள் தாக்கப்படும் அல்லது அவை எதிர்ப்புத்தன்மை உருவாக்கிக் கொள்ளலாம்.
மேலதிக தகவல்கள்

இந்த விடயம் குறித்து மேலதிகமாக நீங்கள் அறிந்துகொள்ள

Strategy on Antibiotic Resistance Switzerland StAR

Federal Office of Public Health FOPH

Swiss Pharmacists Association pharmaSuisse

Association of Swiss doctors FMH